உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 18,000 கடலை உருண்டை அலங்காரத்தில் திருப்பந்தியூர் செல்வ விநாயகர் தரிசனம்

18,000 கடலை உருண்டை அலங்காரத்தில் திருப்பந்தியூர் செல்வ விநாயகர் தரிசனம்

 கடம்பத்துார்; திருப்பந்தியூர் செல்வ விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, இன்று 18,000 கோவில்பட்டி கடலை உருண்டைகளால் ஆன அலங்காரத்தில், பக்தர்களுக்கு செல்வ விநாயகர் அருள்பாலித்தார்.


கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் ஊராட்சியில் அமைந்துள்ளது, செல்வ விநாயர் கோவில். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, 18,000 கோவில்பட்டி கடலை உருண்டைகளால் சிறப்பு அலங்கார தரிசனம் நடந்தது. முன்னதாக, நேற்று மாலை 6:00 மணிக்கு, செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 18,000 கோவில்பட்டி கடலை உருண்டை அலங்காரம் தொடங்கியது. இன்று காலை 9:00 மணிக்கு, கடலை உருண்டை அலங்காரத்தில், செல்வ விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதில், திருப்பந்தியூர், திருமணிக்குப்பம், ஸ்ரீபெரும்புதுார், சோகண்டி, சுங்குவார்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !