உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை!

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை!

வத்திராயிருப்பு: சைவ சமயம் வளர்த்த, 63 நாயன்மார்களில் ஒருவரான, சுந்தரமூர்த்த நாயனார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு, அவருக்கு குருபூஜை வழிபாடு, வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நடந்தது. காலையில், ஐவர் சன்னதியில் உள்ள அவரது சிலைக்கும், அப்பர், சம்மந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார் ஆகியோரது சிலைக்கும், சிறப்பு அபிஷேகள் நடந்தன. சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு, ஐவர் சன்னதியில், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு உள்ளிட்ட பஞ்சபுராண பாடல்கள்,  பாராயணம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை,பக்தசபா நிர்வாகி செண்பகம், கோயில் குருக்கள் பழனிச்சாமி ஓதுவார், செயல் அலுவலர் லதா, பாஸ்கரப்பட்டர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !