விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்பட்டாசு வெடிக்கத் தடை
மதுரை: மதுரை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது, என, கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: செப்.,9ல் நடக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், பங்கேற்பவர் போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாக அறிவித்துள்ள நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். "பிளாஸ்டர் ஆப் பாரீஸ் கலந்த சிலைகளை பயன்படுத்த கூடாது. களிமண், காகிதம் மற்றும் மரக்கூழால் செய்யப்ப்டட சிலைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதி பெற்ற பாதைகளில் சென்று உரிய நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். பட்டாசு வெடிக்கக் கூடாது. போலீசார் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் தான் சிலைகள் வைக்க வேண்டும். வைத்தவர்களே இரவில் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். கரைக்கப்படும் இடங்கள்: மதுரை வைகை வடகரை, கீழத்தோப்பு, ஒத்தக்கடை குளம், வைகை தைக்கால் பாலம், திருப்பரங்குன்றம், செவந்திகுளம் கண்மாய், அவனியாபுரம், அயன்பாப்பாகுடி கண்மாய்.மேலூர் பகுதியில், மண்கட்டி தெப்பக்குளம் மற்றும் சிவன் கோயில் தெப்பக்குளம். வாடிப்பட்டி பகுதியில் குமாரம் கண்மாய், மேலக்கால் வைகை, தாமோதரன்பட்டி தென்கரை, அய்யனார் கோயில் ஊரணி, பெரியாறு கால்வாய். உசிலம்பட்டி பகுதியில், நீர் நிலை அதிகம் உள்ள கிணறுகள், திருமங்கலம் பகுதியில் குண்டாறு, மறவன்குளம், குராயூர் கண்மாய்கள், ஆவல்சூரம்பட்டி கிணறு, சிவரக்கோட்டை கமண்டல நதி, பேரையூர் பகுதியில் மொட்டைமலை ஊரணி, சாப்டூர் கண்மாய், வண்டாரி ஊரணி, எழுமலை கண்மாய், டி.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி கண்மாய்.