வில்லியனூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா
வில்லியனூர்: வில்லியனூர் மற்றும் கூடப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள தென்கலை வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் தேவஸ்தானம்: கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று இரவு 10.30 மணிக்கு திருமஞ்சனமும், நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணர் அவதார உற்சவமும் நடக்கிறது. நாளை (29ம் தேதி) காலை 8 மணிக்கு வெண்ணை தாழி கிருஷ்ணன் வீதி புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவில் சுவாமிக்கு, பக்தர்கள் வெண்ணை வழங்கி சிறப்பு பூஜையில் பங்கேற்றுக் கொள்ளலாம். மாலை 6 மணிக்கு உரியடி உற்சவமும், அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. கூடப்பாக்கம் பெருந்தேவி தாயார் தென்கலை வரதராஜபெருமாள் தேவஸ்தானம்: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கூடப்பாக்கம் பெருமாள் கோவிலில் இன்று (28ம்தேதி) இரவு திருமஞ்சனமும், நாளை (29ம் தேதி) மாலை 4 மணிக்கு உரியடி உற்சவமும், கிருஷ்ணர் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சிறப்பு அதிகாரி ஹரிஹரநமோநாராயணா செய்துவருகின்றார்.