உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரோக்கிய அன்னை தேவாலய விழா துவக்கம்

ஆரோக்கிய அன்னை தேவாலய விழா துவக்கம்

குன்னூர்: அருவங்காடு தூய ஆரோக்கிய அன்னை தேவாலய விழா நாளை துவங்குகிறது. நாளை மாலை 5:30 மணிக்கு, மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி தலைமையில், திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 30ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 3ம் தேதி வரை தினமும் மாலை 5:00 மணிக்கு, ஊட்டி அன்பு கவுன்சிலிங் மைய குரு அமிர்தம் தலைமையில் ஜெபமாலை, நவநாள், திருப்பலி, வேண்டுதல் தேர் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை, தினமும் மாலை 5:30 மணிக்கு, பல்வேறு குருக்கள் சார்பில், திருப்பலி, மறையுரை நடக்கிறது. அடுத்த மாதம் 8ம் தேதி, பங்கின் குடும்ப பெருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 9:00 மணிக்கு மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடக்கிறது; மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு புதிய குருக்கள் தலைமையில் நடக்கும் திருப்பயை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !