செடல் மாரியம்மன் கோவில் திருவிழா
நாமக்கல்: முதலைப்பட்டி, செடல் மாரியம்மன் கோவிலி திருவிழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. நாமக்கல் அடுத்த, முதலைப்பட்டியில், பிரசித்தி பெற்ற செடல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று துவங்கியது. நேற்று மாலை, 6 மணிக்கு பொங்கல் வைத்து ஸ்வாமிக்கு படையல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று (ஆக., 28) காலை, 9 மணிக்கு, ஸ்வாமி செடல் ரதம் ஏறி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு சிறப்பு வாணவேடிக்கை நடக்கிறது. நாளை (ஆக., 29) காலை, 6 மணிக்கு, கிடா வெட்டும், மாலை, 4 மணிக்கு, வண்டி வேஷம், இரவு, 8 மணிக்கு வாணவேடிக்கையும், தொடர்ந்து கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஆகஸ்ட், 30ம் தேதி மாலை, 3 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று இரவு, 10 மணிக்கு, கம்பம் பிடிங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.