உள்ளம் தூய்மையாக இருக்கும்போது சடங்கு சம்பிரதாயங்கள் தேவை தானா?
ADDED :4538 days ago
ஆன்மிக தொடர்பான சடங்குகள் மனிதனுக்கு மிகவும் அவசியம். மனம், வாக்கு, செயல் ஆகியவற்றை தூய்மைப்படுத்துவதற்காகவே முன்னோர் அவற்றை ஏற்படுத்தினர். ஒருவர் விரதம் மேற்கொள்வதாக இருந்தால், காலையில் நீராடி மனத்தூய்மையுடன் கோயிலுக்குச் செல்வார். அந்த நேரத்தில் வேண்டாத சிந்தனையையோ, பேச்சையோ தவிர்த்து விடுவார். சாப்பாட்டில் ஒரு வரைமுறையை உருவாக்கிக் கொள்வார். இப்படி மனிதனை நெறிப்படுத்து வதற்காக இதனை ஏற்படுத்தினர்.