உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி தேருக்கு தங்க முலாம் பூச்சு

திருப்பதி தேருக்கு தங்க முலாம் பூச்சு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு, 4,000 கோடி ரூபாய் செலவில், புதிய தங்கத் தேர் உருவாக்கும் பணி இன்னும் முடிவடையாததால், அப்பணியை தேவஸ்தானம் ரத்து செய்துவிட்டது. பிரம்மோற்சவம் நெருங்கி விட்டதால், பழைய வெள்ளித் தேருக்கு, 25 கோடி ரூபாய் செலவில், தங்க முலாம் பூச முடிவு செய்யப்பட்டது. 30 அடி உயரமுள்ள, பழைய வெள்ளித் தேர் மீது, 2,900 கிலோ, புதிய செப்புத் தகடு பொருத்தப்பட்டு, 73 கிலோ தங்கத்தால், முலாம் பூசும் பணி நேற்று முன்தினம், பூஜையுடன் துவங்கியது. இப்பணி, திருமலையில் உள்ள அருங்காட்சியகத்தில், பலத்த பாதுகாப்புடன் செய்யப்படுகிறது. தங்கமுலாம் பூசும் பணியில் கேரளா, மதுரை மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த, 16 பேர் ஈடுபடுவர். இவர்கள் அனைவரும், 40 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள். இந்தப் பணிகளை, 25 நாட்களுக்குள் முடிக்க, தேவஸ்தானம் திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள, பழைய தங்கத்தேர், திருப்பதியில் உள்ள கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !