அ.பாண்டலம் கோவிலில் 31ம் தேதி தேர்த் திருவிழா
ADDED :4465 days ago
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் 31ம் தேதி நடக்கிறது. சங்கராபுரம் வட்டம் அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் தேர் திருவிழா வரும் 31ம் தேதி மாலை நடக்கிறது. ஒன்றிய சேர்மன் அரசு, துணை சேர்மன் திருமால், ஊராட்சி தலைவர் பூங்காவனம் அண்ணாமலை, முனியம்மாள் பாலசுப்ரமணியன், நாட்டார் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர் மோகன் தேர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை அ.பாண்டலம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.