உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி விழா
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி மஹோத்சவ விழா நேற்று துவங்கியது.திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் சன்னதியில் கிருஷ்ணஜெயந்தி மஹோத்சவ விழா நேற்று துவங்கியது. காலை 6:00 மணிக்கு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் முத்துபந்தல் விமானத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. பகல் 12:00 மணிக்கு அலங்கார திருமஞ்சன சேவை சாற்றுமறை நடந்தது. இரவு 8:00 மணிக்கு வேணுகோபாலன் ஜெயந்தி வைபவம் நடந்தது. இதனையடுத்து அம்ச வாசகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (30ம் தேதி) இரவு சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலாவும், 1ம் தேதி இரவு கருடவாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது. தொடர்ந்து 3ம் தேதி மதியம் அலங்கார திருமஞ் சனம், சேவை சாற்றுமறை, திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. பின்னர் 6ம் தேதி காலை மங்களகிரி, மதியம் மஹா சாந்தி ஹோமம், திருமஞ்சனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்துள் ளனர்.