உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா

திருத்தணி : கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக, திருத்தணி பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தன. திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில், உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர், மாம்பாக்கம், எஸ். அக்ரஹாரம், பீரகுப்பம், வி.கே.என். கண்டிகை, கோரமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிருஷ்ணர் மற்றும் பஜனை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி யாதவ மகா சபை சார்பில், நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பை–பாஸ் சாலையில், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !