சீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :4465 days ago
பேரம்பாக்கம் : காவாங்கொளத்துார் கிராமத்தில் உள்ள, ராதா ருக்மணி உடனுறை கிருஷ்ண சீனிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா, வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது காவாங்கொளத்துார் ஊராட்சி. இங்கு, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ராதா ருக்மணி உடனுறை கிருஷ்ண சீனிவாச பெருமாள் கோவிலை புனரமைத்து, புதிய கோவில் கட்டப்பட்டது. ராஜகோபுர விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா, செப்.,1ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது. முன்னதாக, வரும் 31ம் தேதி, காலை 10:00 மணிக்கு, விமான கலசம் மற்றும் பகவானின் திரு உருவப்படம் ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும்.