உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

ஆஞ்சநேயர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி யோக ஆஞ்சநேயர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேய சுவாமி செந்துார அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகரில், திருநேத்ரா சதுர்புஜ நவகிரக யோக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மூலவர் ஆஞ்சநேய சுவாமி, நேற்று காலை 8:00 மணிக்கு, செந்துார அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், அப்பகுதி பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !