கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை
ADDED :4465 days ago
கிணத்துக்கடவு :கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், கார்த்திகையை ஒட்டி சுவாமிக்கு பகல் 12.00 மணிக்கும், இரவு 7.00 மணிக்கும் பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்றவைகளால் அபிஷேக பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், உற்வச மூர்த்தியான வேலாயுதசாமி, வள்ளி, தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார். இதில், கிணத்துக் கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கும், முத்துமலை முருகனுக்கும், கார்த்திகை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.