உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூரில் உறியடி திருவிழா

தீவனூரில் உறியடி திருவிழா

திண்டிவனம் : தீவனூர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர் ஆதிநாராயணப் பெருமாள் என்கிற ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. மாலை உறியடி திருவிழா, தொடர்ந்து பகவான் கிருஷ்ணன் வெண்ணைத்தாழி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்திருந்தார். வெள்ளிமேடுப் பேட்டை திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுப் பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி காலை 11:00 மணியளவில் வேணுகோபால சுவாமி கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து உறியடி திருவிழா மற்றும் கிருஷ்ணர் வீதியுலாவும் நடந்தது. விழுப்புரம்விழுப்புரம் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் பெருமாள், கோபாலகிருஷ்ணர் அலங்காரத்தில், கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !