உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்!

ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்!

அன்னூர்: மூக்கனூர், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், விமானம், சால கோபுரம் ஆகியவை பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டன. கும்பாபிஷேக விழா 23ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. 24ம் தேதி, புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களுடன், சுவாமி திருவீதியுலா முக்கிய வீதிகளில் நடந்தது. 25ம் தேதி கோபுர கலசம் வைத்தல், சிலைக்கு கண் திறத்தலும், இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது. 26ம் தேதி காலை 6.30 மணிக்கு, தேவாங்ககுல ஜகத்குரு தயானந்தபுரி சாமி தலைமையில், வேள்வி சாலையிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் கோவிலை வலம் வந்து, விமானம் மற்றும் மூலவருக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிறுமுகை, மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !