உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு

கருமாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு

செஞ்சி:செஞ்சி பவதாரிணி நகர் கருமாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.செஞ்சி சிறுகடம்பூர் அன்னை பவதாரிணி நகர் கருமாரி அம்மன், காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்ப ரேஸ்வரர், விநாயகர், தண்டாயுதபாணி நூதன ஆலய புனராவர்த்தன ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 15ம் தேதி நடந்தது. மறு நாள் மண்டலாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கி 48 நாட்கள் நடந்தன. இதன் நிறைவு விழா ஆக 30 நடந்தது.இதை முன்னிட்டு கடந்த 29ம் தேதி மாலை 4 மணிக்கு அன்னை ஓம்பவதாரிணி தலைமையில் கலச ஸ்தாபனம், ருத்ர ஜபம், ருத்ர ஹோமம் மற்றும் ஸ்ரீசூக்த பாராயண ஹோமம் நடந்தது. ஆக 30 காலை 8 மணிக்கு ஸ்நபன சிறப்பு அபிஷேகம், ருத்ர ஹோமம் மற்றும் மகா பூர்ணாஹுதியும் நடந்தது. கோபுர கலசங்களுக்கும், மூலஸ்தான தெய்வங்களுக்கும் கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.ஆகம வல்லுநர் டாக்டர் சபாரத்தினம், இலக்கிய சொற்பொழிவாளர் சண்முகம், தொழிலதிபர் பிரேம்குமார், டாக்டர்கள் ரமேஷ்பாபு, அஜிதா, திண்டிவனம் அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதாயளன், முருகேச ஸ்தபதி, தொழிலதிபர்கள் மணியம்மாள், காந்திமதி, வரதராஜன், சியாமளா கலந்து கொண்டனர். ஞானஸ்கந்த சிவாச்சாரியார், சுந்தரமூர்த்தி சிவம் பூஜைகளை செய்தனர். விழா ஏற்பாடுகளை ஓம் பவதாரிணி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் அன்னை ஓம் பவதாரிணி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !