உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்ணாடம் கோவில் கும்பாபிஷேகம்

பெண்ணாடம் கோவில் கும்பாபிஷேகம்

பெண்ணாடம்: பெண்ணாடம் சித்தி விநாயகர், பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பெண்ணாடம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள சித்தி விநாயகர், பாலதண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, இரவு 7:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், இரவு 9:00 மணிக்கு முதல் கால பூஜை துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 9:00 மணிக்கு மகா தீபாராதனை, 10:00 மணியளவில் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !