உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல்லில் 32 அடி உயர சிலை 108 விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை!

திண்டுக்கல்லில் 32 அடி உயர சிலை 108 விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை!

திண்டுக்கல்: திண்டுக்கல், கோபாலசமுத்திரம் கரையில் உள்ள, தனியாருக்குச் சொந்தமான, 108 விநாயகர் சிலைகள் கொண்ட கோவிலில், 32 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட, மற்றொரு பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா, நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டியில் உள்ள, முருகன் சிற்ப கலைக்கூடத்தில், இச்சிலை செதுக்கப்பட்டது. நேற்று இச்சிலைக்கு, தானிய, நாணய, மலர், சொர்ண அபிஷேகம் செய்யப்பட்டது.

கோவில் நிர்வாகி மருதநாயகம் கூறியதாவது, ""200 டன் உள்ள ஒரே பாறையை நாங்கள் கொடுத்தோம். சண்முகவேல் என்பவரின் குமாரர்கள் தலைமையிலான, சிற்பக் குழுவினர் செதுக்கினர். தற்போது, 120 டன் எடையில் விநாயகர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. "மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் என, பெயரிட்டுள்ளோம். 6 அடி உயர சிம்மாசனம், 3 அடி பீடம், 23 அடி உயரம் சிலை என, மொத்தம், 32 அடி உயரம் உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !