உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவி­நா­சி­யப்பர் கோவில் கால்கோள் விழா

அவி­நா­சி­யப்பர் கோவில் கால்கோள் விழா

கும்­மி­டிப்­பூண்டி: பெருங்­க­ருணை நாயகி உட­னுறை அவி­நா­சி­யப்பர் கோவில் அமைப்­ப­தற்­கான கால்கோள் விழா நடந்­தது. கும்­மி­டிப்­பூண்டி அடுத்த, ஐயர்­கண்­டிகை கிரா­மத்தில் இருந்த, சிவன் கோவில், சிதி­ல­ம­டைந்து, கால ஓட்­டத்தில், தடம் தெரி­யாமல் மறைந்து போனது என, கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், சில மாதங்­க­ளுக்கு முன், 900 ஆண்­டுகள் பழமை வாய்ந்த, இரு சிவ லிங்­கங்கள், நந்தி, விஷ்ணு, துர்கை, வீர­பத்­திர காளி கற்­சி­லைகள், அப்­ப­கு­தியில் கண்டு எடுக்­கப்­பட்­டன. சைவ திரு­முறை நூலில், கயிறு சார்த்தி பார்த்து, கிடைக்க பெற்ற லிங்­கத்­திற்கு அவி­நா­சி­யப்பர் என, பெய­ரி­டப்­பட்­டது. இதை­ய­டுத்து, ஐயர்­கண்­டிகை கிரா­மத்தில், பெருங்­க­ருணை நாயகி உட­னுறை அவி­நா­சி­யப்பர் கோவில் அமைக்க, கிராம மக்கள் முடிவு செய்­தனர். கோவில் அமைக்கும் திருப்­ப­ணிக்­கான கால்கோள் விழா, நேற்று நடந்­தது. யாகம் வளர்க்­கப்­பட்டு, புனித நீர் ஊற்றி, கால்கோள் அமைக்கும் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !