உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வர­சித்தி விநா­யகர் கோவிலில் பிரம்­மோற்­சவம் 9ம் தேதி துவக்கம்

வர­சித்தி விநா­யகர் கோவிலில் பிரம்­மோற்­சவம் 9ம் தேதி துவக்கம்

நகரி: காணிப்­பாக்கம் வர­சித்தி விநா­யகர் கோவிலில், பிரம்­மோற்­சவ விழா, 9ம் தேதி துவங்­கு­கி­றது. சித்தூர் மாவட்டம், காணிப்­பாக்கம் கிரா­மத்தில், சுயம்பு வர­சித்தி விநா­யகர் கோவில் அமைந்­துள்­ளது. இக்­கோ­விலில் ஆண்­டு­தோறும், விநா­யகர் சதுர்த்தி உற்­சவ விழா மூன்று வாரம் சிறப்­பாக நடத்­தப்­படும். இம்­மாதம், 9ம் தேதி முதல், வரும், 29ம் தேதி வரை நடை­பெற உள்ள பிரம்­மோற்­சவ விழா­விற்­கான ஏற்­பா­டு­களை, மாநில அற­நி­லைய துறை அதி­கா­ரி­களின் மேற்­பார்­வையில் கோவில் நிர்­வா­கிகள் செய்து வரு­கின்­றனர். விழா நிகழ்ச்­சிகள் வரும், 9ம் தேதி விநா­யகர் சதுர்த்தி அன்று, அதி­கா­லையில், மூல­வ­ரான சுயம்பு வர­சித்தி விநா­யக பெரு­மா­னுக்கு சிறப்பு அபி­ஷேகம், ஆரா­த­னைகள் முடிந்த பின்னர், அதி­காலை, 4:00 மணி முதல், பக்­தர்கள், சுவாமி தரி­ச­னத்­திற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர். பஸ் வசதி தெலுங்­கானா பிரி­வினை கார­ண­மாக, ஆர்.டி.சி., போக்­கு­வ­ரத்து ரத்­தா­கி­ உள்­ளது. விநா­யகர் சதுர்த்தி ஒட்டி பக்­தர்­களின் வச­திக்­காக, விலக்கு அளிக்­கக கோரி, ஒருங்­கி­ணைந்த ஆந்­தி­ராவை வலி­யு­றுத்தும் கமிட்­டி­யி­ன­ரிடம் பேருந்­து­களை இயக்க கோரி பேச்சு வார்த்தை நடத்த உள்­ள­தாக, நிர்­வாக அதி­காரி தெரி­வித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !