சித்தலூர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :4746 days ago
தியாகதுருகம்: சித்தலூர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.தியாகதுருகம் அடுத்த சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கருவறையில் உள்ள புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.இரவு உற்சவர் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் ஆராதனைகள் நடந்தது. அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர்.