உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய கருப்பு சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்!

பெரிய கருப்பு சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்!

விருதுநகர்: காரியாபட்டி தாலுகா, ஆவியூர் கிராமம் சொல்லாயி அம்மன் புன்னியஸ்தலத்தில் அமைந்துள்ள பெரிய கருப்பு சுவாமி திருக்கோயில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. கோயிலில் பெரிய கருப்பு சுவாமி, ஸ்ரீ ஆண்டிச்சாமி, ஸ்ரீ வீரபத்திர சுவாமி, ஸ்ரீ இருளப்ப சுவாமி, ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ ராக்காயி அம்மன், ஸ்ரீ இருளாயி அம்மன், ஸ்ரீ சின்னக்கருப்பு சுவாமி, ஸ்ரீ சோணை சுவாமி, ஸ்ரீ செல்லாயி அம்மன் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களுக்கு பிரதிஷ்டை செய்து  ஆவணி மாதம் 26ந் தேதி 11.9.13 புதன்கிழமை ஷஷ்டி திதியும், அனுஷம் நட்சத்திரமும், சித்தயோகமும், அமிர்த யோகமும் கூடிய சுப ஜெய நேத்ரம் பொருந்திய நன்நாளில் காலை 9.05 மணிக்குமேல் 10.25 மணிக்குள்ளாக அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி நிரல்: ஆவணி 24ம் தேதி (9.9.13) திங்கட்கிழமை.. மாலை 4.00 மணி மங்கள இசையுடன் யஜமான சங்கல்பம் அனுக்ஞை விக்னேஸ்வரபூஜை, தேவதா அனுக்ஞை கணபதி ஹோமம், பூர்ணாஹுதிமாலை 6.00 மணி முதல் தீர்த்த பூஜை, பிரவேசபலி, ரக்ஷாபந்தன ஹோமம், மிருத்ஸக்கிரஹம் அங்குரார்பணம் கும்ப அலங்காரம், கலாகர்ஷனம்இரவு 8.00 மணி யாகசாலை பிரவேசம், மண்டபாராதனம்இரவு 8.30 மணி விசேஷ திரவ்யாஹூதிஇரவு 9.00 மணி பூர்ணாஹுதி, தீபாராதனை(காலம்-1) ஆவணி 25-ம் தேதி(10.9.13) செவ்வாய்கிழமை: அதிகாலை 5.30 மணி: மஹாகணபதிஹோமம், 1008 அஷ்டோத்திரம் சகல பரிவார தெய்வங்களுக்கும் ருத்ரஜபம், ஸ்ரீ ஸீக்தம், நாராயண ஸீக்தம், சுதர்ஸனம் ஹோமம், சகருட ஜபம்காலை 9.00 மணி: மகேஸ்வர பூஜை மூலமந்திரம் அஸ்திர மந்திரங்களால் சகல தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல்காலை 10.30 மணி: புதிய பிம்பங்கள் நயநோன் மீரன பூஜைகாலை 11.00 மணி: இரண்டாம் கால மஹா பூர்ணாஹுதி தீபாராதனைமாலை 4.30 மணி: பூர்ணகும்பம், ஊர்வலம், மங்கள இசையுடன் வேதிக்கார்ச்சனை பஞ்சஸீக்தம் லெட்சுமி பாக்கிய ஹோமம், வில்வர்ச்சனை, காயத்திரி ஜெபம்இரவு 7.00 மணி: மூலமந்திர ஜெபஹோமம், துர்க்கா ஹோமம், சரஸ்வதி ஹோமம் பாக்கியஹோமம், லெட்சுமி ஹோமம், குபேர ஹோமம், வருணஹோமம்இரவு 9.30 மணி: மஹாபூரணாஹுதி தீபாராதனை(காலம் 3)இரவு 10.. மணி சதுர்வேத பாராயணம் திருமுறை நடைபெறும். ஆவணி 26ம் தேதி (11.9.13) புதன்கிழமை: காலை 6.15 மணி மங்கள இசையுடன் கணபதி ஹோமம் மண்டப சாந்தி, கோபூஜை, ரஹ்ஷாபந்தனம்காலை 8.30 மணி நாடீசந்தானம் ஸ்பர்சாஹுதிகாலை 9.05 மணி மஹா பூர்ணாஹுதி தீபாராதனை (காலம் 4)காலை 9.30 மணி யாத்ராதானம், கடம் புறப்பாடுகாலை 10.25 மணி மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்காலை 11.00 மணி அபிஷேகம், தீபாராதனை பிரசாதம் வழங்குதல் கும்பாபிஷேகம் சர்வசாதகம்: சிவகாம வாசஸ்பதி சிவஸ்ரீ வி. என். எஸ். காத்திகேயன் சிவாச்சாரியார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !