உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்தக் கோயில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம் தான்!

எந்தக் கோயில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம் தான்!

*நிறைந்த ஆர்வமும், நல்ல எண்ணமும் முன்னேற்றத்திற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.
*பொய்சொல்வது நம்மோடு பிறந்த குணம் அல்ல. அது வெளியே இருந்து வந்து தான் ஒட்டிக்கொள்கிறது. இதை உணர்ந்து கொண்டால் பொய்யை ஒதுக்கிவிட முடியும்.
*எந்த தெய்வத்திற்காகக் கட்டப் பட்ட கோயிலாக இருந்தாலும் சரி,அங்கே தெய்வம் ஒன்று தான். அது மனிதர்கள் உயர்நிலையை அடைவதற்காகத் தான் அமைக்கப்பட்டிருக்கிறது.
*சில நேரங்களில், ஒருவரின் வாழ்க்கை இந்த பூமியின் விதியையே நிர்ணயிக்கிறது.
*கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருப்பதை விட பெருமை மிக்க விஷயம் வேறில்லை.
*உத்தமமான செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாக  செய்வதே சிறந்தது.
*இரவில் அதிகநேரம் கண் விழிப்பது கூடாது. தேவையான அளவு உறங்காதவனால் விழிப்பு நேரத்தில் எதையும் சரிவரச் செய்ய இயலாது.
*மகத்தான முடிவு எங்கு இருக்கிறதோ, அங்கே தான் மகத்தான தொடக்கமும் இருக்கிறது.
*கலியுகத்தில் கடவுளை அடைய அவரது நாமத்தை சொல்வது ஒன்றே சிறந்தவழி.
*பிறருக்காக வாழும் பொதுநல மனப்பான்மை மனிதனுக்கு மிக அவசியம்.
*உன் குறைகளை மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்ள முயற்சி செய்.
*நீ வேண்டுவதை விட, கடவுளின் வேண்டுதலை அறிந்து கொள்வது அவசியம்.
*உண்மையில் பிரச்னை உனக்குள் இருக்கிறது. சுற்றுப் புறத்தில் இல்லை.
*எந்தச் சூழ்நிலையிலும் மனஅமைதியோடு இருப்பதே மனச்சமநிலை.
*எல்லாச் செல்வமும் கடவுள்உடையது. அதை வைத்துஇருப்பவன் காவலனே அன்றி அதன் உரிமையாளன் அல்ல.
*கடவுளைச் சரணடையும் போது கோரிக்கை, நிபந்தனை, பிடித்தம் ஏதுமின்றி முழுமையாக மனதைக் கொடுத்துவிடு.
*ஒருபக்கம் உண்மை, மற்றொரு பக்கம் பொய் என்று இரண்டுக்கும் மனக் கதவைத் திறந்து வைத்துவிட்டு கடவுளின் அன்பை எதிர்பார்ப்பது வீண்.
*அச்சம் எழும் போதெல்லாம் தைரியத்தை வரவழைத்துக் கொள்ளும் முயற்சியை மனிதன் கடைபிடிக்க வேண்டும்.
*மன உறுதி, தூயசிந்தை,அயராத உழைப்பு இவை மூன்றும் மிகச் சக்தி வாய்ந்தசாதனங்கள்.
*வம்பளக்கும் குணம் உனது சாதனைக்குத் தடையாக இருக்கும்.
*முதலில் நீ யார் என்பதை உன்னுள் உணர்ந்து கொள். அதன் பின் செயலாற்று.
*பிறருடைய குறைகளை உற்று நோக்குவதும், அவர்களை குறை கூற முயல்வதும் தீமையை உண்டாக்கும்.
*தவறை விலக்கினால் மட்டுமே போதும். தெய்வ சக்தி செயல்படத் தொடங்கி மற்ற அனைத்தையும் செய்து விடும்.
*உன்னை வேண்டுமானால் சந்தேகித்துக் கொள். ஆனால், கடவுள் உன்னை வழி நடத்துகிறார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
*இதயத்தில் தூய எண்ணம் நிலைபெற்றிருந்தால், உலகில் எதைக் கண்டும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
*செல்வத்தால் பெருமை கொள்ளாதே. பிறர் பாராட்ட வேண்டும் என்றும் விரும்பாதே.
*இன்னும் ஆயிரம் ஆண்டுகள் உழைத்தால் அன்றி, லட்சியத்தை அடைய முடியாது என்ற எண் ணத்துடன் விடாமுயற்சி செய்.
-அரவிந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !