லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் திருமண தடை நீங்க மாலை மாற்றும் விழா!
ADDED :4404 days ago
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், கருட பஞ்சமியின், இரண்டாம் ஆண்டு பால்குட ஊர்வல விழாவை முன்னிட்டு, மஹாவிஷ்ணு, மஹாலட்சுமி, கருடாழ்வார் ஆகிய ஸ்வாமிகளுக்கு, அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சூடி கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள் நாச்சியாரின் மாலை, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்டது. அதே போல், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இருந்து, முதல் முறையாக, சேந்தமங்கலத்திற்கு மாலை கொண்டு வரப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மாலையை, லட்சுமி நாராயணனுக்கும், ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலையை, மஹாலட்சுமி தாயாருக்கும் அணிவித்தனர்.இந்த மாலை மாற்று விழாவில் பங்கேற்றால், திருமண தடை, புத்திர பாக்கியம், குடும்ப அமைதி ஏற்படும் என்பது ஐதீகம்.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் பக்தர் குழுவினர் செய்தனர்.