கரையாத விநாயகர் சிலைகள் பக்தர்கள் வேதனை
ADDED :4521 days ago
ராஜபாளையம்: ராஜபாளையத்தில், கண்மாயில் கரைக்காமல் போடப்பட்ட விநாயகர் சிலைகளால், பக்தர்கள் வேதனையடைந்தனர். ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா கடந்த, ஐந்து நாட்களாக நடந்து வந்தது. விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் உருவ சிலைகள், தர்மாபுரம் தெரு மாப்பிள்ளை விநாயகர் கோயிலிலிருந்து, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே, புதியாதி குளம் கண்மாயில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவில் ஊர்வலம் முடிந்த நிலையில், அவசரகதியில், கண்மாயில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதில் சில சிலைகள், கரைக்கப்படாத நிலையில்,அப்படியே கிடந்தது. அவ்வழியாக சென்ற பக்தர்கள், மன வேதனையடைந்தனர்.