உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கை பிர­வாகம்: பக்­தர்கள் பர­வசம்

கங்கை பிர­வாகம்: பக்­தர்கள் பர­வசம்

ஆர்.கே.பேட்டை:ஆண்­டு­தோறும் கங்­கை­யம்மன் திரு­வி­ழாவில், மழை பொழியும். அது போல, இந்த ஆண்டும் மழை பெய்­ததால், பக்­தர்கள் பர­வ­சத்தில் உள்ளனர். ஆர்.கே.பேட்டை, கங்­கை­யம்மன் திரு­விழா நேற்று முன்­தினம் நடந்­தது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை, எல்லை பொங்­க­லுடன் திரு­விழா துவங்­கி­யது. நேற்று முன்­தினம் காலை, கரகம், பொங்கல் வழி­பாடு, கூழ் வார்த்தல் ஆகி­யவை நடந்தன. மாலை 7:00 மணிக்கு, களி­மண்ணால் செய்­யப்­பட்ட உற்­சவர், ஊர்­வ­ல­மாக எடுத்து வரப்­பட்டு, பஜார் சந்­திப்பில், வேப்­பிலை குடிலில் அமர்த்­தப்­பட்டார். முக்­கிய நிகழ்­வான கும்பம் படைத்தல், இரவு 8:00 மணிக்கு நடந்­தது. இதில், ஆண், பெண், குழந்­தைகள் என, 1,000 பேர் திரண்டு வந்து அம்­ம­னுக்கு கும்பம் படைத்­தனர். வேப்­பிலை ஆடை­ய­ணிந்து, தீச்­சட்டி, மாவி­ளக்கு ஏந்­தியும், பக்­தர்கள் நேர்த்­திக்­க­டனை செலுத்­தினர். பக்­தர்கள், அம்மன் குடிலை நெருங்­கி­யதும், பலத்த மழை பெய்யத் துவங்­கி­யது. கொட்டும் மழையில் பக்­தர்கள், அம்­மனை வழி­பட்டு சென்­றனர். விடிய விடிய மழை கொட்­டித்­தீர்த்­தது. இது­கு­றித்து, கிரா­மத்தினர் கூறு­கை­யில், ‘பருவ மழை துவங்கும் போது, கங்­கை­யம்­ம­னுக்கு திரு­விழா நடத்­து­வதன் கார­ணமே, நல்ல மழைப்­பொழிவு வேண்டும், அனைத்து தொழில்­களும் சிறப்­பாக நடக்க வேண்டும் என்பதற்கா­கவே தொன்று தொட்டே, அம்­ம­னுக்கு கும்பம் படைத்­த­வுடன் மழை பொழி­வது வழக்­க­மாக உள்­ளது. இதே நாளில், ஆண்­டு­தோறும், மழை பெய்­வது தெய்வ செயல்’ என்­றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !