நந்தியை வழிபட்ட பிறகு தான், சுவாமியை வணங்க வேண்டுமா?
ADDED :4520 days ago
நந்தியை வணங்கிய பின்னரே, சுவாமியை வணங்க சந்நிதிக்கு செல்ல வேண்டும். கைலாயத்தில் சிவதரிசனம் பெற வரும் தேவர்கள், நந்தீஸ்வரரை வணங்கி உத்தரவு பெற்ற பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவர். கோயிலிலும் இந்த நடை முறையையே நாமும் பின்பற்ற வேண்டும். அதனால் தான் வாசலில் நந்தி இருக்கிறது. சில கோயில்களில் அனுமதி யளிக்கும் நந்தி நின்ற கோலத்தில் அதிகாரநந்தி என்ற பெயருடன் இருப்பார். அவரிடமும் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.