உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்­சி வர­த­ராஜ பெருமாள் கோவில் கிழக்கு கோபுர வாசலை மூடி­யது ஏன்?

காஞ்­சி வர­த­ராஜ பெருமாள் கோவில் கிழக்கு கோபுர வாசலை மூடி­யது ஏன்?

காஞ்­சி­புரம்: காஞ்­சி­புரம் வர­த­ராஜ பெருமாள் கோவில், கிழக்கு கோபுர வாசலை, மூடி­யது குறித்து, கோவில் நிர்­வாகம் விளக்கம் அளித்­துள்­ளது. இந்த வாசலை திறந்து பக்­தர்­களை அனு­ம­திக்க வேண்டும் என, கோரிக்கை விடப்­பட்­டுள்­ளது. காஞ்­சி­புரம் வர­த­ராஜ பெருமாள் கோவி­லுக்கு, கிழக்கு மற்றும் மேற்கில், இரண்டு ராஜ கோபு­ரங்கள் உள்­ளன. கடந்த மே மாதம், இந்த கோவில் திருப்­ப­ணிகள் முடிந்து, கும்­பா­பி­ஷேகம் நடந்­தது. கிழக்கு கோபுர வாசல் கதவு சிதி­ல­ம­டைந்­தி­ருந்­ததால், பல­ஆண்­டு­க­ளாக அந்த வழி மூடப்­பட்­டுள்­ளது. இந்த வாசல் கதவை சீர­மைக்க, 20 லட்சம் ரூபாய் ஒதுக்­கப்­பட்­டது. 28.5 அடி உய­ரமும், 12அடி அக­லமும் கொண்ட கதவு செய்து, கடந்த ஜுன் மாதம், வாசலில் பொருத்­தப்­பட்­டது. ஆனால், கதவை சீர் செய்த பின்னும் பயன்­பாட்­டுக்கு திறக்­கப்­ப­ட­வில்லை. இது, பக்­தர்­க­ளி­டையே அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அப்­ப­கு­தியை சேர்ந்த பல­ராமன் கூறு­கையில்,கிழக்கு கோபுர வாசல் கதவு, சிதி­ல­ம­டைந்து இருந்­ததால் திறக்­கப்­ப­ட­வில்லை. தற்­போது, புதிய கதவு பொருத்­தப்­பட்­டுள்­ளது. ஆனாலும், வழி­பாட்­டுக்கு திற­க்­க­வில்லை. இந்த வழியைத் திறந்தால், இந்த பகுதி மக்­க­ளுக்கும் வய­தா­ன­வர்­க­ளுக்கும் சாமியை தரி­சிக்க வச­தி­யாக இருக்கும், என்றார். கோவில் நிர்­வாக அலு­வலர் தியா­க­ராஜன் கூறு­கையில், கோவில் திரு­விழா காலங்­களில், இந்த வாசலைத் திறந்து வைப்போம். மற்ற நாட்­களில் திறந்து வைத்தால் பாது­காப்பு இல்லை. காவல் துறை வேண்­டுகோள் படியே இந்த வாசலை மூடி வைத்­துள்ளோம், என்றார். கிழக்கு கோபுர வாசல் கதவு, சிதி­ல­ம­டைந்து இருந்­ததால் திறக்­கப்­பட­வில்லை. தற்­போது, புதிய கதவு பொருத்­தப்­பட்­டுள்­ளது. ஆனாலும், வழி­பாட்­டுக்கு திற­க்­க­வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !