சொர்ண மகாகணபதி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :4421 days ago
சிவகங்கை : சிவகங்கை அருகே குறிஞ்சி நகரில் உள்ள சொர்ண மகாகணபதி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 15ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தினமும், யாகசாலை பூஜைகள், சிறப்பு வேள்விகள் நடந்தது. நேற்று காலை பூர்ணாகுதியுடன், சிறப்பு பூஜைகள் துவங்கின. காலை 9.15 மணி முதல் 10.20 மணிக்குள், சொர்ண மகாகணபதி கோபுரம், மூலவர் சன்னதி கோபுரத்தில், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், அன்னதானம் நடந்தது. குறிஞ்சி நகர் பொதுமக்கள் ஏற்பாட்டை செய்தனர்.