பொன்பத்தியில் கும்பாபிஷேகம்
ADDED :4426 days ago
செஞ்சி:செஞ்சி தாலுகா பொன்பத்தி முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 14ம் தேதி காலை 10.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமமும், மாலை 5.30 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்பஅலங்காரம், முதல் கால யாசாலை பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், ரக்ஷாபந்தனம் நிகழ்ச்சியும், கடங்கள் புறப்பட்டு 7.30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு சாமி வீதிஉலாவும் நடந்தது. விழா குழுவினரும், கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.