உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியத்தில் பிரதோஷ பூஜை

ரிஷிவந்தியத்தில் பிரதோஷ பூஜை

ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.பிரதோஷ விழாவை முன்னிட்டு ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர் லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் நடந்தது. பலிபீடம் அருகில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆரானைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் சிலை அலங்கரித்து, காளை வாகனத்தில் வைத்து கோவிலை சுற்றி பக்தர்கள் சுமந்தபடி வலம் வந்தனர். மகா தீபராதனையில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். கோவில் குருக்கள் நாகராஜ், சோமு பூஜைகளை செய்தனர். தியாகதுருகம் அடுத்த புக்குளம் கைலாச நாதர் கோவிலிலும் பிரதோஷவிழா கொண்டாடப்பட்டது. பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !