விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம்!
ADDED :4771 days ago
திருத்தணி:புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி, ம.பொ.சி., சாலையில், சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில், சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. நேற்று, புரட்டாசி மாத முதல் நாளை ஒட்டி, கோவில் வளாகத்தில், அதிகாலை, 5:00 மணிக்கு, ஒரு யாக சாலை, ஐந்து கலசங்கள் வைத்து, கணபதி, சாந்தி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, மூலவர் விநாயகர் பெருமானுக்கு, பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு சுஅபிஷேகம் நடத்தப்பட்டன. தொடர்ந்து வண்ண, மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வாமி தரிசனம் செய்தனர்.