உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ விழா

சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ விழா

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே சமயத்தில், பால், பன்னீர், தேன், இளநீர், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் போன்றவைகளால் அபிஷேக பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, பூக்களால், சிவலோகநாதருக்கும், சிவலோநாயகிக்கும், நந்திக்கும் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பொன்மலை வேலாயுதசாமி, பெரியகளந்தைஆதிஸ்வரன்,தேவணாம்பாளையம்அமணலிங்கேஸ்வரர், அரசம்பா ளையம் திருநீலகண்டர் போன்ற சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !