உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் திருக்­கல்­யாணம்

பெருமாள் கோவிலில் திருக்­கல்­யாணம்

பொதட்டூர் பேட்டை: பெருமாள் கோவிலில் நடந்து வரும் பிரம்­மோற்­சவ விழாவில், பூவ­ராக சுவா­மிக்கு, நேற்று, திருக்­கல்­யாண வைபோவம் நடந்­தது. பொதட்டூர் பேட்டை அடுத்த, மேல்­பொ­தட்­டூரில், பூவ­ராக சுவாமி பெருமாள் கோவில் உள்­ளது. இக்­கோ­விலில் பிரம்­மோற்­சவ விழா, கடந்த, 16ம் தேதி, கொடி­யேற்­றத்­துடன் துவங்­கி­யது. விழாவின் முக்­கிய நிகழ்ச்­சி­யாக, நேற்று, காலை 10:00 மணிக்கு, திருக்­கல்­யாண வைபோவம் நடந்­தது. மூலவர், தங்க கவ­சத்தில் பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்தார். மாலையில், உற்­சவர் பூவ­ராக சுவாமி, அம்­பா­ளுடன், புஷ்ப அலங்­கா­ரத்தில் எழுந்­த­ருளி பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்தர். இன்று காலை, 10:00 மணிக்கு, சக்­ரஸ்­தானம் நிகழ்ச்­சியும், மாலை, பிரம்­மோற்­சவ நிறைவு விழாவும் நடை­பெற உள்­ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !