தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் தேர்பவனி
ADDED :4391 days ago
தென்காசி : தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பெருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது. இதில் சிறப்பு நிகழ்வான தேர்பவனி நடந்தது. திருவிழா நாட்களில் தினமும், திருப்பலிகள் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. திருவிழாவில் 9ம் நாள் தேர்பவனி நடந்தது. இதில் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பெருவிழா பெருவிழாவின் 10ம் நாளான நேற்று (29ம் தேதி) ஆலயத்தில் அற்புத பெருவிழா நடந்தது. இவ்விழாவில் பங்கு தந்தைகள், ஆயர்கள் தலைமையேற்று திருப்பலி மற்றும் பெருவிழா சிறப்பு திருப்பலிகளை நடத்தினர். ஏற்பாடுகளை பங்கு தந்தை வியாகப்பராஜ் மற்றும் உதவி பங்கு தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.