தூயமிக்கேல் அதிதூதர் ஆலய தேர் பவனி விழா
ADDED :4390 days ago
சிவகங்கை : சிவகங்கை அருகே மிக்கேல்பட்டணம், தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடந்தது. இந்த ஆலயத்தில், செப்.,20 அன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சிவகங்கை பங்கு தந்தை சேவியர் தலைமையில், முதல் நாள் திருப்பலி நடந்தது. தினமும், சிறப்பு திருப்பலி நடந்தது. 9ம் நாளான, செப்.,28 அன்று ஆடம்பர கூட்டுதிருப்பலியுடன், தேர்பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், தூய மிக்கேல் அதிதூதர் திருவீதி உலா வந்தார். பத்தாம் நாளான செப்.,29 அன்று காலை 8.30 மணிக்கு, திருவிழா சிறப்பு திருப்பலி,மாலை நற்கருணை பவனியுடன் விழா நிறைவு பெற்றது. மிக்கேல்பட்டணம், பங்குதந்தை புஷ்பராஜ் தலைமையில், பங்கு இறைமக்கள், கிராமத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிவகங்கை இளையோர் பணிக்குழு செயலர் மரியபாக்கியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.