உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோவிலில் சமபந்தி விருந்து

மலைக்கோவிலில் சமபந்தி விருந்து

காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் தமிழ்செல்வி, டவுன் பஞ்சாயத்து சேர்மன் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கலெக்டர் விவேகானந்தன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆர்.டி.ஓ., மேனகா, பி.டி.ஓ.,க்கள் ரேணுகா, நாகராஜ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் காவேரி, மாது, முருகன், வசந்தன், காந்தி, கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* தர்மபுரி வாரியார் பயிற்சி மையத்தில் நடந்த விழாவில் சமூக ஆர்வலர் அரிகிருஷ்ணன் தலைமை வகித்து காந்தி படத்திற்கு மாலை அணிவித்து சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு குறித்தும் நாடு சுதந்திரம் பெற்றுது குறித்து பேசினார். பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !