வெள்ளையூர் கோவிலில் சிறப்பு ஹோமம்
ADDED :4388 days ago
உளுந்தூர்பேட்டை: வெள்ளையூர் மாரியம்மன், கங்கையம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளையூர் மாரியம்மன், கங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடந்து வந்தன. இறுதி நாளான 30ம் தேதி காலை 9.30 மணி நடராஜ குருக்கள் தலைமையில் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராமசாமி, முக்கியஸ்தர்கள் விஸ்வநாதன், திருமுருகன், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், நெடுமாறன், கருணாநிதி, செல்வராஜ், முருகன், சொக்கலிங்கம், மனோகரன், தெய்வீகன் ஆகியோர் செய்திருந்தனர்.