கூத்தாட்டுக்குளம் கோயிலில் நவராத்திரி விழா ஆரம்பம்!
ADDED :4387 days ago
கோட்டயம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே, கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயிலில், தங்க மருந்து பிரசாதம் வழங்கல் மற்றும் நவராத்திரி திருவிழா, நாளை (அக்.,5) துவங்கி 14 ம் தேதி வரை நடக்கிறது. கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகத்தால் நடத்தப்படும், மிக பழமை வாய்ந்த இக்கோயிலில், நவராத்திரி நாட்களில், தங்கம் கலந்த, நோய் தீர்க்கும் மருந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. காலை6 முதல் 11 மணி வரை, மாலை 5முதல் 7 மணி வரை மருந்து பிரசாதம் வழங்கப்படும். தினமும் மாலையில் 6 மணி முதல், கலைஞர்களின் சங்கீத கச்சேரி, நடன, நாட்டிய நிகழ்ச்சி நடக்கும். விஜயதசமி நாளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 094478 75067, 094961 34500.