சுரண்டையில் 6ம்தேதி உலக புனித ஜோதி தர்ம பெருவிழா
சுரண்டை: சுரண்டையில் வரும் 6ம்தேதி அய்யா நிச்சயித்தபடி அழகிய வைகுண்டநாதன் அய்யாவின் 58வது மாதாந்திர உலக புனித ஜோதி பணிவிடை புரட்டாசி தர்ம பெருந்திருவிழா நடக்கிறது. சுரண்டை சுபசுந்தரி மகாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் வரும் 6ம்தேதி காலை 11 மணிக்கு உலக புனித ஜோதி பணிவிடை, 12 மணிக்கு உச்சி படிப்பு, உகப்பெருக்கு பணிவிடை, மதியம் 1 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. உலக புனிதஜோதி பணிவிடைக்கு அன்புமக்கள் அனைவரும் அவசியம் தங்கள் வீடுகளிலிருந்து சகலவிதமான திருவிளக்குகளை அதிகம் கொண்டுவர வேண்டுமென்றும், திருவிளக்கு ஒவ்வொன்றிற்கும் சுருள் இனிமம் வழங்கப்படும் எனவும், வெற்றிலை,பாக்கு, துளசி, தேங்காய்எண்ணை, சரம், வாழைப்பழம், எலுமிச்சைகனி, தேங்காய், சந்தனம், பன்னீர், பழவகைகள், பச்சரிசி, மிளகு, சிறுபயிறு, வத்தல் போன்ற பணிவிடைக்கு தேவையான பொருட்களையும், அன்னதர்மத்திற்குரிய பொருட்களையும் பொதுமக்கள் வழங்கலாம் எனவும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்பாடுகளை சுரண்டை சுற்று வட்டார அய்யாவின் அன்புக்கொடி மக்கள் சபையினர் செய்துவருகின்றனர்.