உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக அமைதி வேண்டி மிளகாய் வத்தல் யாகம்

உலக அமைதி வேண்டி மிளகாய் வத்தல் யாகம்

தூத்துக்குடி: உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும், தூத்துக்குடியில் மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் பிரித்யங்கிராதேவி கோயில் உள்ளது. இங்கு உலக அமைதியை வலியுறுத்தியும், மழை வேண்டியும், 2013 ம் ஆண்டை குறிக்கும் வகையிலும்,  2013 கிலோ மிளகாய் வத்தலை போட்டு யாகம் நடந்தது. வடுவூர் மகாலிங்கம் கோயில் சித்தர் பீடம் சற்குரு சீனிவாச சித்தர் முன்னிலை வகித்தார். இதில், வெளி நாட்டு பக்தர்களும் பங்கேற்று, வத்தலை யாக குண்டத்தில் போட்டு வழிபட்டனர். பின், அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !