திருவக்கரையில் ஜோதி தரிசனம்
ADDED :4392 days ago
திருக்கனூர் : திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில், அமாவாசையொட்டி ஜோதி தரிசனம் நடந்தது. திருக்கனூர் அடுத்த திருவக்கரையில் பிரசித்திபெற்ற சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள வக்ரகாளியம்மனுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் ஜோதி தரிசனம் நடந்து வருகிறது. அமாவாசை தினமான அக் 4 காலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 10:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, பகல் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் ஜோதி தரிசன நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழுப்புரம் உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் மேனகா, ஆய்வாளர் சுரேஷ், மேலாளர் ரவி, அர்ச்சகர் சேகர், ஊராட்சி தலைவர் வேணு செய்திருந்தனர்.