உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் மங்கள சண்டி யாகம்

பெருமாள் கோவிலில் மங்கள சண்டி யாகம்

ஊட்டி: ஊட்டி சேவா சங்கம் சார்பில் 8, 9ம் தேதிகளில், சீனிவாச பெருமாள் கோவில் மண்டபத்தில் மங்கள சண்டியாகம் நடக்கிறது. நாளை காலை 8:00 மணிக்கு கோபூஜை, அஸ்வபூஜை, ஸ்ரீவிக்னேஸ்வரபூஜை, நவக்கிரக ஹோமம், 11:00 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, 11:30 மணிக்கு, சவுந்தர்ய லஹரி பாராயணம், மதியம் 2:00 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, மாலை 4:30 மணிக்கு பிரதானகடம், சவுபாக்ய திரவியங்கள் மாரியம்மன் கோவிலிலி­ருந்து ஊர்வல மாக எடுத்து வருதல், 5:30 மணிக்கு அபிராமி அந்தாதிபாராயணம் மாலை 6:00 மணிக்கு மேல் யோகினி பைரவர் பலி நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வேதிகா அர்ச்சனை, கணபதி ஹோமம், ஸ்ரீமங்கள சண்டி ஹோமம், சவுபாக்ய திரவிய சமர்ப்பணம், பகல் 1:30 மணிக்கு பிரம்மச்சாரி பூஜை, மகாதீபாராதனை பகல் 2:00 மணிக்கு பிரசாத வினியோகம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊட்டி சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !