சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :4351 days ago
திருவேங்கடம்: சங்கரன்கோவில் தாலுகா, சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த 5ம் தேதி ஆரம்பமானது. இத்திருவிழா வரும் 14ம்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினசரி இரவு துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய அம்மன்களுக்கும், கொலுவுக்கும் பூஜை வழிபாடு நடக்கிறது. வரும் 14ம்தேதி நந்திவாகனம், பலிபீடம், பிரதிஷ்டையை முன்னிட்டு அன்று மாலை 4 மணி முதல் விநாயகர் ஹோமம், யாகசாலை பூஜை, நவக்கிரக பூஜை, அபிஷேகம், பூர்ணாகுதி கொலுபூஜை ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயில் நிர்வாகி, சுப்பையா, விழாக்குழுவினர், செங்குந்தர் சமுதாய பொதுமக்கள் செய்து வருகின்றனர்.