வாணி சரஸ்வதீஸ்வரர்!
ADDED :4779 days ago
வேதங்களில் சரஸ்வதி தேவி பெரிதும் போற்றப்படுகிறாள். இவள் யாகம் காக்கும் தேவியாகவும், யாகம் நடத்துபவர்களுக்கு அறிவு, ஞானம், தேஜஸ், வீரம் மற்றும் வெற்றி ஆகியவற்றைத் தரும் தேவதையாகவும் புகழப்படுகிறாள். வாக்தேவி, ஓசையாக வெளிப்படும்போது வாணி என்றும்; அறிவாக வெளிப்படும்போது சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகிறாள். பெருவேளூர் எனும் தலத்தில் பிரம்மனின் வலப்புறம் வாணியாகவும்; இடப்புறம் சரஸ்வதியாகவும் அமர்ந்து இறைவனை வழிபட்டாள். எனவே இங்குள்ள ஈஸ்வரனுக்கு வாணி சரஸ்வதீஸ்வரர் என்று பெயர்.