உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை

மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள குழந்தை சுவாமி சித்தருக்கு நேற்று ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு காலை சிறப்பு ஹோம பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் கோவிலை வலம் வந்து குழந்தை சுவாமி சித்தர் உற்சவர் மற்றும் மூலவருக்கு கலச அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !