ஒன்பது தீபச் சுடர்கள்
ADDED :4779 days ago
டெல்லியிலிருந்து 473 கி.மீ. தொலைவிலுள்ள பதான்கோட், அம்பிகையின் நாக்கு விழுந்த ஜ்வாலா முகிபீடம். பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்து அன்னையை தரிசித்திருக்கின்றனர். இங்கு எண்ணெயும் திரியுமின்றி பச்சையும் நீலமும் கலந்து நவசக்திகளாக ஒன்பது தீச்சுடர்கள் பாறையிலிருந்து ஒளி வீசுகின்றன. நவராத்திரி நாயகிகளே தீபச் சுடர்களாக தரிசனம் தருகிறார்களாம். அக்கம்பக்கத்து கிராம மக்கள் தாங்கள் எடுத்து வரும் விளக்குகளில் இந்த நவஜோதியின் சுடர்களை ஏற்றி தலைமேல் சுமந்து செல்கின்றனர்.