உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளுக்கு நன்றி!

கடவுளுக்கு நன்றி!

அடர்ந்த காட்டின் வழியே சீடர்களோடு பயணம் செய்தார் குரு. வழியில் பசியால் அவர்கள் களைத்துப் போனபோது வழிப்போக்கன் ஒருவன் உணவுப் பொட்டலங்களை அவர்களுக்குத் தந்தான். பெற்றுக்கொண்ட குரு, கடவுளுக்கு நன்றி! என்று கூறிவிட்டு, உணவை சாப்பிடத் தொடங்கினார். அப்போது சீடன் ஒருவன் கேட்டான், சுவாமி! உணவை தந்து உதவிய மனிதருக்கு நன்றி சொல்லாமல், கடவுளுக்கு நன்றி சொல்வது ஏன்? புன்னகைத்த குரு, அரசர் ஒருவருக்கு பரிசளிக்க விரும்பினால் தாமே செல்வதில்லை. தன் சார்பாக யாரையாவது அனுப்பி, பரிசளிப்பார். அதனைப் பெறுபவர் அரசருக்குத்தானே நன்றி சொல்வார்! அப்படித்தான் கடவுளும் தம் சார்பாக எவரையேனும் அனுப்பி, நமக்கு உதவுவார். எனவே எவர் மூலமும் உதவி எப்படிக் கிட்டினும் அதற்கான நன்றி கடவுளுக்குத்தான் சேர வேண்டும்! என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !