சக்கர விநாயகர் கோவிலில் நவராத்திரி விழா!
ADDED :4379 days ago
சென்னை: சென்னை, தி.நகரில் உள்ள, சக்கர விநாயகர் கோவிலில், நவராத்திரி விழா, கோலாகலமாக நடந்து வருகிறது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தி.நகர், தண்டபாணி தெருவில் அமைந்துள்ளது, சக்கர விநாயகர் கோவில். இந்த கோவிலில், கடந்த, 5ம் தேதி துவங்கிய நவராத்திரி விழா, வரும், 13ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை, 7:30 மணிக்கு கோதாரீஸ்வரர், உடனுறை பார்வதி அம்பாளுக்கு, விசேஷ அபிஷேகமும், மாலையில், விசேஷ அலங்காரமும், லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனையும் நடந்து வருகிறது. நேற்று, வசுதா ரவி குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதே போல், இன்று, வித்யா கல்யாணராமனின் வாய்ப்பாட்டும், நாளை, சீனிவாசனின், சொற்பொழிவும் நடக்கிறது.